மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
'காட்டடி காட்டிய ரஸ்ஸல்' சில மணித்துளிகளே நீடித்த பெங்களூருவின் மகிழ்ச்சி; மீண்டும் சூழ்ந்த சோகம்.!
ஐபிஎல் சீசன் 12 தற்போது நடைபெற்று வருகிறது. 2019 ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி
நேற்று மோதுயது. இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது பெங்களூர் அணி.
இந்நிலையில் நேற்றைய போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பார்திவ் படேல் மற்றும் விராட் கோலி சிறப்பாக ஆடினர். பார்திவ் படேல் 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.
இதனையடுத்து அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் களமிறங்கி பந்துகளை நாலாபக்கமும் பறக்கவிட்டார். இதுவரை தொடர் தோல்வியை சந்தித்த பெங்களூரு அணியை மீட்டெடுக்கும் நோக்கில் விராட் மற்றும் டீவில்லியர்ஸ் ஆடினர்.
அதிரடியாக ஆடிய விராட் கோலி 49 பந்துகளில் 84 ரன்களும், டிவில்லியர்ஸ் 32 பந்துகளில் 63 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நீண்ட நண்ட்களுக்கு பிறகு விராட் மிகவும் சிறப்பாக ஆடினார். இந்த போட்டியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் பறிகொடுத்து 205 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணிக்கு 206 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா வீரர்கள் கணிசமாக ரன்களை குவித்து அவுட்டாகி வெளியேறினார். இதனால் ஒரு கட்டத்தில் தோல்வி பாதையை நோக்கி கொல்கத்தா சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கடைசி கட்டத்தில் களமிறங்கிய அந்த அணியின் ரஸ்ஸல் ருத்ர தாண்டவம் ஆடினார். தான் சந்தித்த 13 பந்துகளில் 48 ரன்கள் குவித்து பெங்களூருவை மிரட்டினார்.
அதில் ஒரு பவுண்டரி உட்பட ஏழு சிக்ஸர்களை பறக்கவிட்டார். பெங்களூருவின் மோசமான பந்துவீச்சால் கடைசி 3 ஓவர்களில் மட்டும் 53 ரன்கள் குவிக்கபட்டது. இதனால் கடைசி 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் அந்த அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் நடந்து முடிந்த 4 போட்டிகளிலுமே தோல்வியை தழுவியதால் பெங்களூரு வீரர்கள் உட்பட ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.