மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டேவிட் வார்னரின் திடீர் விலகல் முடிவு!! சோகத்தில் ரசிகர்கள்!!
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் ஆனது 11 சீசன் நிறைவடைந்து 12வது சீசன் வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சென்னை மற்றும் டெல்லி அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் மற்ற அணிகள் தகுதி சுற்றில் நுழைய கடுமையாக போராடி வருகின்றனர். இதனால் நடைபெறும் அனைத்து போட்டிகளும் விறுவிறுப்பாக செல்வதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்று சிறப்பாக ஆடி அந்த அணி பல போட்டிகளில் வெற்றி பெற காரணமாக இருந்த டேவிட் வார்னர் தற்போது விலகியுள்ளார். 12 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 6 வெற்றி 6 தோல்வி என்ற நிலையில் அடுத்த சுற்றுக்கு நுழையும் வாய்ப்பு அதிகம் உள்ள நிலையில் டேவிட் வார்னர் விலகியுள்ளது ரசிகர்கள் குறிப்பாக ஹைதராபாத் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஹைதராபாத்தில் நடந்த 48வது லீக் போட்டியில் ஹைதராபாத், பஞ்சாப் அணிகள் மோதின. இதில் வார்னர் 81 ரன்கள் விளாச, ஹைதராபாத் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இந்தப் போட்டியோடு தான் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்த ஐபிஎல் 12 வது சீசனில் 12 போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ள டேவிட் வார்னர் 692 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். 2 ஆண்டுகள் தடை நீங்கிய பிறகு ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்ற வார்னர் உலகக் கோப்பைக்கான அந்த அணியில் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிக்காக தனது அணியில் இடம் பெற்று தன்னை முன் தயார்படுத்திகொள்ள இந்த முடிவை எடுத்துள்ளார்.