#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சேப்பாக்கத்தில் குவியும் ரசிகர்கள்!! சூடுபிடிக்கும் ஐபிஎல் T20!!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 23 ஆம் தேதி நடக்கவிருக்கும் சென்னை- பெங்களூரு அணிகள் மோதும் ஐபிஎல் லீக் முதல் போட்டிக்கான 'டிக்கெட்' விற்பனை இன்று துவங்கவுள்ளது.
ஐபிஎல் T20 தொடரின் 12வது சீசன் வரும் மார்ச் 23ஆம் தேதி துவங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள இந்த முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான 'நடப்பு சாம்பியன்' சென்னை அணி, கோலியின் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கான 'டிக்கெட்' விற்பனை இன்று சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிக்கெட்டுகளை வாங்குவதற்கு நள்ளிரவு முதலே சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான கவுன்டர்களில் ரசிகர்கள் காத்துக்கிடந்தனர்.
இன்று காலை 11:30 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை டிக்கெட் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. டிக்கெட் குறைந்தபட்ச விலையாக ரூ. 1300 அறிவிக்கப்படுள்ளது. இதன் பின், ரூ. 2500, ரூ. 5000, ரூ. 6500 என்ற விலையில் 'டிக்கெட்' விற்பனை செய்யப்பட உள்ளது.