டக் அவுட் ஆன கோபத்தில் இப்படியா செய்வது.? சர்ச்சையில் சிக்கிய தினேஷ் கார்த்திக்.!
இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் இரண்டாவது தகுதி சுற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேற்று மோதியது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங்கை துவக்கிய டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நேற்றைய ஆட்டத்தில் ஆட்டத்தில் ரபாடா பந்தில் தினேஷ் கார்த்திக் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். போல்ட் ஆன அவர் ஒரு ஸ்டம்பை கோபத்தில் தள்ளி விட்டுச் சென்றார். இதையடுத்து ஐபிஎல் விதிமுறையை மீறிய குற்றத்துக்காக அவர் மீது ஐபிஎல் நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தனது தவறை தினேஷ் கார்த்திக் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆட்ட நடுவர் முடிவு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.