மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேதார் ஜாதவின் உடல்நிலை எப்படி உள்ளது, உலகக்கோப்பையில் கலந்துகொள்வாரா?
இந்திய கிரிக்கெட் அணி வரும் 22 ஆம் தேதி உலகோப்பையில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து புறப்படுகிறது. இந்திய அணி முதலில் அட்டவணைப்படி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஆடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான அந்த பயிற்சி ஆட்டங்களில் இந்திய ஆடப்போவதில்லை என தெரிகிறது.
இந்நிலையில் இந்திய அணி தாயகத்தில் இருந்து இங்கிலாந்து புறப்படுவதற்குள் இந்திய அணிக்காக தேர்வான அணைத்து 15 வீரர்களும் சரியான உடல் நிலையில் உள்ளாரா என கண்காணிக்க வேண்டியது மிகவம் அவசியமான ஒன்று. இதில் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஆடிய வீரர்களில் இந்திய அணியின் கேதார் ஜாதவ் மட்டும் தொடரில் காயம் காரணமாக இடையில் நீக்கப்பட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனியின் தலைமையில் ஆடிய கேதார் ஜாதவ் தொடரின் கடைசியில் அணியில் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. இதற்கு காரணம் அவரது தோள்பட்டையில் ஏற்பட்ட சிறிய அளவிலான காயம் தன என அணியின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இறுதிப்போட்டியில் கூட கேதார் ஜாதவ் ஆடவில்லை.
அதே சமயம் இந்த ஐபிஎல் தொடரில் கேதார் ஜாதவின் திறமை பெரிதாக வெளிப்படவில்லை. இந்த தொடரில் 14 ஆட்டங்களில் ஆடிய கேதார் ஜாதவ் வெறும் 162 ரன்களை மட்டுமே குவித்தார். ஆள் ரௌண்டரான இவர் பௌலிங்கிலும் அந்த அளவிற்கு சோபிக்கவில்லை.
இந்நிலையில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த கேதார் ஜாதவ் தற்போது பூரண உடல் தகுதியுடன் இருப்பதாகவும், இந்திய வீரர்களுடன் அவரும் 22 ஆம் தேதி இங்கிலாந்து புறப்படுவார் என்றும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்திய அணிக்காக இதுவரை 59 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள கேதார் ஜாதவ் 1174 ரன்களும் 27 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.