#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் மீண்டும் அதே விசயத்தை செய்ய போர் அடிக்கிறது - விராட் கோலி பரபரப்பு பேட்டி!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக உருவாகி வருகிறார். சச்சினின் பல சாதனைகளை கோலி நிச்சயம் முறியடிப்பார் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
சமீபத்தில் கூட உலகக்கோப்பை தொடரின் போது 20000 சர்வதேச ரன்களை மிக விரைவாக கடந்தவர் என்ற சாதனையை படைத்தார். மேலும் சச்சினின் 452 இன்னிங்சில் அடித்த 49 ஒருநாள் சதத்தினை விரைவில் கோலி முறியடிக்கபோகிறார். காரணம் கோலி வெறும் 228 இன்னிங்சிலேயே 41 சதங்கள் விளாசியுள்ளார்.
30 வயதினை கடந்துவிட்ட கோலி இந்த சாதனைகளை படைக்க கடின உழைப்பு தேவை என்று தான் நாம் எண்ணுகிறோம். ஆனால் அவருக்கோ மீண்டும் மீண்டும் ரன்களை எடுத்துக்கொண்டே இருக்க போர் அடிக்கிறது என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த விராட் கோலி, "மீண்டும் மீண்டும் ஒரு விசயத்தை செய்ய போர் அடிக்கிறது. ஆனால் வேறு வழியில்லை. ஒவ்வொரு நாளும் கடினமான பயிற்சிகளுக்கு பிறகு மீண்டும் ஒரே விசயத்தை தான் செய்ய வேண்டியுள்ளது.
ஒரே சீராக விளையாடுவதும் வெற்றி பெறுவதும் மீண்டும் மீண்டும் செய்யும் செயல் தான். இதே போன்று சீராக விளையாடுவது போர் அடிக்கிறது. இவ்வாறு செய்வது மிகவும் கடினமாக உள்ளது" என்று பேசியுள்ளார்.