மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தங்கள் அணியை கூண்டோடு கலைக்கப்போகும் பிரபல ஐபில் அணி!! இதுதான் காரணமா??
வரவிருக்கும் அடுத்த ஐபில் போட்டியில் பிரபல ஐபில் அணி ஒன்று தனது அணியை கூண்டோடு கலைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபில் போட்டியில் தோணி தலைமையிலான சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் அடுத்த ஐபில் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படும்நிலையில், அடுத்த ஐபில் சீசனில் அகமதாபாத், லக்னோ என 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போதுள்ள ஐபில் அணிகளில் அனைத்து அணி வீரர்களும் கலைக்கப்பட்டு புதிதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதேநேரம், தற்போதுள்ள ஐபில் அணிகள் தங்கள் அணியில் இருக்கும் ஏதாவது 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்துகொள்ளப்போகும் வீரர்கள் குறித்து ஆலோசித்துவருகிறது. இந்நிலையில் தங்கள் அணியில் இருக்கும் அனைத்து வீரர்களையும் வெளியேற்றி, தங்கள் அணியை புதிதாக கட்டமைக்க பஞ்சாப் அணி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. இதனால் தங்கள் அணியை கூண்டோடு கலைத்துவிட்டு, புதிய வீரர்களை தேர்வுசெய்ய அந்த அணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.