ஆஸ்திரேலியா தொடரிலிருந்து விலகும் முக்கிய வீரர்.! அணிக்கு ஏற்படும் பேரிழப்பு.!



main player removed from team for injury

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் இருந்து டேவிட் வார்னர் விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் டார்சி ஷார்ட் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

warner

நேற்றைய போட்டியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த டேவிட் வார்னருக்கு எதிர்பாராத விதமாகத் தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவரைப் பரிசோதித்த மருத்துவர் சில நாட்கள் ஓய்வில் இருக்கும்படி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ்க்கு அடுத்த போட்டியில் ஓய்வு அளிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்ற டேவிட் வார்னர் முக்கியப் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.