#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அச்சச்சோ என்னாச்சு..! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி.! ரசிகர்கள் பேரதிர்ச்சி.!
ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இதற்காக சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
வழக்கம் போல நடப்பு சாமியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது தான் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. அதற்க்கு காரணம் இந்திய முன்னாள் கேப்டன் தோனி என்றே கூறலாம். இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியுள்ளார். தனது கேப்டன் பதவியை ரவிந்திர ஜடேஜாவுக்கு தோனி விட்டுக்கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், வீரராக அணியில் தோனி தொடர்வார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள்தொடங்கியதில் இருந்தே சென்னை அணியில் விளையாடி வரும் தோனி, சென்னை அணியின் கேப்டனாக இதுவரையில் தனது பணியை சிறப்பாக செய்துவந்தார். அவர் இதுவரை சென்னை அணிக்கு நான்கு கோப்பைகளை வென்று கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியுள்ளதாக வெளியான தகவல் சென்னை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.