மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யுவராஜ் மற்றும் நெஹராவிற்கு நடனம் சொல்லித்தந்த நெஹராவின் மகன்! வைரலாகும் வீடியோ!
நாம் சிறுவர்களாக இருந்த காலம் தொடங்கி நமது பிள்ளைகள் சிறுவர்களாகும்வரை இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வருபவர் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா. தோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார் நெஹ்ரா.
அதேபோல் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் யுவராஜ் சிங்க். ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் அடித்த யுவராஜை இன்றுவரை யாரும் மறக்கவில்லை. ஆனால் துரதிர்ஷடவசமாக இந்திய அணியின் அதிரடி வீரர்களாக இருந்து வந்த நெஹரா மற்றும் யுவராஜ் சிங் இருவரும் பார்ம் அவுட் ஆனதால் இந்திய அணியில் நீண்ட காலமாக இடம்பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இதில் யுவராஜ் மட்டும் சாம்பியன் கோப்பை தொடரில் மட்டும் ஆடியிருந்தார்.
இந்நிலையில் யுவராஜ் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் ஆஷிஷ் சர்மா நடனமாடிக்கொண்டிருக்கிறார் அதனை கண்டு யுவராஜ் சிங் சிரித்துவிட்டு தானும் நடனமாடுகிறார். இருவரும் சரியாக நடனமடததால் ஆஷிஷ் நேஹராவின் மகன் இருவருக்கும் எப்படி ஆடுவது என்பதை சொல்லிக்கொடுக்கிறார்.