பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பந்தை எடுத்து நேரா ரோஹித் ஷர்மா மீது வீசிய ப்ரித்வி ஷா.. செம அடி.. டென்ஷனான ரோஹித் சர்மா - வைரல் வீடியோ
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் ப்ரித்வி ஷா வீசிய பந்து ரோஹித் ஷர்மா மீது வேகமாக பட்டுச்சென்ற வீடியோ காட்சி தற்போது வைரலாகிவருகிறது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையே இடையே நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் மைதானத்தில் தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடத்தொடங்கியது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியில் இருந்து வெளியேறியநிலையில் அவருக்கு மாற்று வீரராக ப்ரித்திவ் ஷா களமிறங்கி பீல்டிங் செய்துகொண்டிருந்தார்.
அப்போது ஆஸ்திரேலிய அணி வீரர் மார்னஸ் பந்தை அடித்துவிட்டு ரன் ஓடினார். அப்போது அங்கு பீல்டிங் செய்துகொண்டிருந்த ப்ரித்வி ஷா ரன் அவுட் செய்வதற்காக பந்தை எடுத்து வேகமாக பவுலரிடம் வீசினார். அப்போது அவர் வீசிய பந்து அங்கு பீல்டிங் செய்துகொண்டிருந்த ரோஹித் ஷர்மாவின் கையில் வேகமாக பட்டு சென்றது.
இதனால் வலியால் துடித்த ரோஹித் ஷர்மா ப்ரித்வி ஷாவை முறைத்து பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றார். பின்னர் ஓவர் முடிந்த உடன் ப்ரித்திவ் ஷா, ரோஹித் சர்மாவிடம் சென்று வருத்தம் தெரிவித்தார். அதன்பின் இருவரும் சகஜமாக பேசி கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
⚠ Friendly fire ⚠
— cricket.com.au (@cricketcomau) January 15, 2021
Live #AUSvIND: https://t.co/IzttOVtrUu pic.twitter.com/8naJ3ykMe7