#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இவருக்கு இப்படி ஒரு ஏமாற்றமா.. பூட்டிவைத்த கனவுகளை போட்டுடைத்த ரஹானே!
இந்திய கிரிக்கெட் அணியில் பல ஆண்டுகளாக விளையாடி வருபவர் அஜிங்யா ரஹானே. அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ள ரஹானேவால் இந்திய அணியில் ஒரு நிரந்தரமான இடத்தை பிடிக்க முடியவில்லை என்பது வேதனையான ஒன்று.
இந்திய அணிக்காக 90 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் தனக்கு இடம் கிடைக்காதது மிகவும் வருத்தமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். அந்த தொடரில் இந்திய அணிக்கு 4 ஆவது வீரராக விளையாட யாரும் சரியாக அமையவில்லை.
முதலில் விஜய்சங்கர் பின்னர் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே மிடில் ஆர்டரில் அனுபவம் பெற்ற ரஹானேவிற்கு வாய்ப்பு வழங்காதது சற்று அதிர்ச்சியாய் தான் இருந்தது.
இதைப்பற்றி தற்போது பேசியுள்ள ரஹானே, "2019 உலகக்கோப்பை அணியில் 4 ஆவது வீரராக களமிறங்க இந்திய அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்த்தேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட முயல்வேன்" என கூறியுள்ளார்.