கெத்து காட்டிய இந்திய அணியின் புதிய கேப்டன்.! தடுமாறும் ஆஸ்திரேலியா.!



rahane played very well

முதல் டெஸ்ட் முடிந்தநிலையில் விராட் கோலி நாடு திரும்பிய நிலையில், ரஹானே தற்போது இந்திய அணிக்கு கேப்டனாக உள்ளார். இந்தநிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 36 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்றைய 2வது நாள் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்ல் கில் 45 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய புஜாரா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து  கேப்டன் ரகானே, 111 பந்துகளில் அரை சதம் கடந்தார். 

rahaneஇதனையடுத்து ஹனுமா விஹாரி 21 ரன்களிலும், ரிஷாப் பண்ட் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தற்போது ரவீந்திர ஜடேஜா 40 ரன்களுடனும், கேப்டன் ரஹானே 104 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்தியா 82 ரன்கள் முன்னிலையோடு உள்ளது.