#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்திய வீரர்கள் களம் இறங்குவதற்கு முன்பு கண்டிப்பாக அது மிக அவசியம்! ரஹானே பேட்டி!
கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு முடிந்து போட்டிகள் துவங்கினாலும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயாராக எல்லா வீரர்களுக்கும் சுமார் ஒரு மாதமாவது தேவைப்படும் என அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
பல நாடுகளுக்குச் சென்று விளையாடி வந்த கிரிக்கெட் வீரர்கள் கொரோனா காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருவதே ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக உள்ளது. இந்தநிலையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே நேற்று இணையம் வாயிலாக பத்திரிகையாளர்களிடம் பேசினார்.
அப்போது ரஹானே கூறுகையில், வீட்டிற்குள்ளே முடங்கியிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் கொரோனா தாக்கம் முடிந்து எந்த போட்டிகளில் விளையாடினாலும், அதற்கு முன்பாக வீரர்கள் முறையாக பயிற்சி எடுத்து தயாராவதற்கு குறைந்தது 3 அல்லது 4 வாரங்கள் அவசியமாகும். ஆனால் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மட்டுமே கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
நான் தற்போது பேட்டிங் செய்வதை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் எனது பயிற்சியாளர் கொடுத்துள்ள அட்டவணையை நான் பின்பற்றி வருகிறேன். வீட்டிலேயே உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்து வருகிறேன். கொரோனா தாக்கம் இனி கிரிக்கெட் பழைய பொற்காலத்துக்கு கொண்டு செல்லும் என நினைக்கிறேன் என ரஹானே தெரிவித்துள்ளார்.