கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
மழை முற்றிலும் நின்றுவிட்டது! இலக்கு இந்தியாவிற்கு சாதகமாக அமையுமா?
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி 9 மணியளவில் மான்செஸ்டரில் மழை சற்று குறைந்திருந்தது. மீண்டும் ஆட்டம் துவங்கும் என எதிர்பார்த்து என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அடுத்த 20 நிமிடத்தில் மீண்டும் கனமழை பெய்ய துவங்கிவிட்டது.
இந்நிலையில் இந்திய நேரப்படி 10 மணியளவில் மழை முற்றிலும் நின்றுவிட்டது. மைதானத்தில் போடப்பட்டிருந்த கவர்கள் நீக்கப்பட்டு வருகின்றன. நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்துவிட்டு ஆட்டம் எப்போது துவங்கும் எத்தனை ஓவர்கள் என்பதை தெரிவிப்பர்.
இன்றைக்குள் முடிவு தெரிய வேண்டுமெனில் இந்திய நேரப்படி 11:30 மணிக்குள் ஆட்டம் துவங்கப்பட வேண்டும். அப்போது தான் குறைந்தபட்ச ஓவர்களான 20 ஓவர் இந்திய அணி ஆட முடியும். அப்படி நடத்தப்பட்டால் இந்தியாவின் இலக்கு 20 ஓவரில் 148 ஆகும்.