#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஐபிஎல் ஏலத்திற்கு பிறகு ரெய்னா எடுத்த அதிரடி முடிவு... இது தான் ரெய்னாவின் அடுத்த பிளான்னா...
ஐபிஎல் ஏலத்திற்கு பின்னர் தனியார் ஊடாகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ரெய்னா, தன்னுடைய அடுத்த பிளான் நல்ல சமையல்காரர் ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை சிஎஸ்கே அணியில் தல தோனிக்கு அடுத்தப்படியாக சின்னத்தல என அழைப்படும் ரெய்னா தான் கேப்டனாக வருவார் என கூறப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கும் அணி நிர்வாகத்துக்கு இடையே சுமூகமான நிலைமை இல்லாமல் இருந்துள்ளது.
கடந்த ஆண்டு அவரின் மோசமான விளையாட்டை பார்த்து கடைசி சில போட்டிகளில் அணியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சிஎஸ்கே அணி ரெய்னாவை கழற்றி விட்டது.
சிஎஸ்கே அணி ரெய்னாவை ஏலத்தில் எடுக்கவில்லை. அதுமட்டுமின்றி மற்ற அணிகளும் அவரை ஏலத்தில் எடுக்காததால் அவர் அன்சோல்ட் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் ஐபிஎல் ஏலத்திற்கு பிறகு தனியார் ஊடாகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் ரெய்னா.
அப்போது அவரிடம் அடுத்து என்ன செய்ய போகிறீர்கள் அரசியலில் சேர போகிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அவர் எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது கிரிக்கெட் மட்டுமே தெரியும். அதன் மீதே எனது காதல் இருக்கும் என்று கூறியுள்ளார். இப்போது நல்ல சமையல்காரர் ஆக வேண்டும் என்பதே எனது விருப்பம் என தெரிவித்துள்ளார்.