#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கே.எல் ராகுலுக்கு பதிலாக ரிஷப் பண்ட் கேப்டன்.! துணை கேப்டன் யாருன்னு பார்த்தீங்களா..! பிசிசிஐ அறிவிப்பு
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி இன்று தொடங்குகிறது. ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணியை கேஎல் ராகுல் வழி நடத்துவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இருந்து கே எல் ராகுல் விலகியுள்ளார். இதனையடுத்து கே.எல் ராகுலுக்கு பதிலாக ரிஷப் பண்ட் கேப்டனாகவும், ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொடரில் இருந்து காயம் காரணமாக சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவும் விலகியுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.