மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இருந்து ரோகித் சர்மா நீக்கம்! அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை 5-0 என சாதனை வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆடுகிறது. முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
5 ஆவது டி20 போட்டியில் கேப்டன் பொறுப்பை ஏற்ற ரொகித் சர்மா பேட்டிங் செய்துகொண்டிருக்கும் போது ஏற்பட்ட சதைப்பிடிப்பால் பாதியிலேயே வெளியேறினார். மீண்டும் பீல்டிங் செய்ய அவர் வரவில்லை.
அவரது உடல்நிலை இன்னும் குணமாகாத நிலையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஒருநாள் தொடரில் மயங் அகர்வாலும் டெஸ்ட் தொடரில் ப்ரித்திவ் ஷாவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மயங் அகர்வால் மற்றும் ப்ரித்திவ் ஷா இருவரும் தங்கள் முதல் ஒருநாள் போட்டிகளை விளையாட உள்ளனர். ஒருநாள் போட்டியில் ப்ரித்திவ் ஷா துவக்க ஆட்டக்காரராகவும் கே. எல். ராகுல் நான்காவது வீரராகவும் இறக்கப்படுவார்கள் என கோலி தெரிவித்துள்ளார்.
India’s Test squad: Virat (Capt), Mayank, Prithvi Shaw, Shubman, Pujara, Ajinkya Rahane (vc), Hanuma Vihari, Wriddhiman Saha (wk), Rishabh Pant (wk), R. Ashwin, R. Jadeja, Jasprit Bumrah, Umesh Yadav, Mohd. Shami, Navdeep Saini, Ishant Sharma (subject to fitness clearance).
— BCCI (@BCCI) February 4, 2020