மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேற லெவல் ஹிட்மேன்... முன்னாள் கேப்டன்களை பின்னுக்கு தள்ளி கேப்டன் ரோகித் சர்மா செய்த சாதனை.!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றிபெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. இந்தநிலையில், நேற்று நடந்த 3வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் 3 போட்டிளிலும் சிற்ப்பாக செய்ல்படதால் ரோகித் சர்மா தலைமையிலான அணி சாதனைப் படைத்துள்ளது.
அதாவது கபில்தேவ், சௌரவ் கங்குலி, தோனி, விராட் கோலி என பல ஜாம்பவான்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியாவின் கேப்டனாக இருந்த போதும் தொடரை முழுவதுமாக வென்றதில்லை. அதனை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.