இந்த தமிழக வீரருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு வழங்காதது நியாயமே இல்லை.! முன்னாள் வீரர்கள் கண்டனம்
ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். ஆனால் முதல் 2 போட்டியில் மட்டுமே அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. 'சூப்பர் 4' சுற்றின் 2 போட்டியிலும் தினேஷ் கார்த்திக்குக்கு 11 பேர் கொண்ட அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தினேஷ் கார்த்திக் சமீப நாட்களாக சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இந்த நிலையில் தினேஷ் கார்த்திக்கை ஆடும் லெவனில் சேர்க்காதது தவறான முடிவு என்று முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில், முன்னாள் விக்கெட் கீப்பரும், தேர்வு குழு முன்னாள் தலைவருமான கிரண் மோரே தினேஷ் கார்த்திக்கை ஆடும் லெவனில் சேர்க்காதது குறித்து விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தினேஷ் கார்த்திக் தன்னை ஒரு சிறந்த பினிஷர் என்பதை நிரூபித்துள்ளார். அவருக்கு வாய்ப்பு வழங்காதது நியாயம் இல்லை. அவரை ஆடும் லெவனில் தேர்வு செய்து இருக்க வேண்டும். அவருக்கு வாய்ப்பு கொடுக்காதது தவறான முடிவு என தெரிவித்துள்ளார்.