மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஷாருக்கான் அதிருப்தி.. கொல்கத்தா அணியில் தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்ஷிப் நிலைக்குமா?
ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை இரண்டு தோல்விகள் மற்றும் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. நேற்று நடந்த டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
கொல்கத்தா அணியில் பல நட்சத்திர வீரர்கள் இருந்தபோதிலும் அந்த அணி தோல்வியை தழுவுவது பல ஏமாற்றங்களை அளித்துள்ளது. இந்த தோல்விக்கு காரணம் கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் தவறான முடிவுகள் தான் என்ற கருத்து நிலவுகிறது.
தொடர்ந்து சுனில் நரேனை ஓப்பனிங்கில் இறக்குவது, மோர்கனை மிகவும் தாமதமாக இறக்குவது, பந்துவீச்சாளர்களை சரியாக கையாள்வதில்லை என பல குற்றச்சாட்டுகள் அவர் மேல் எழுந்துள்ளன. கொல்கத்தா அணியின் உரிமையாளர் நடிகர் ஷாருக்கான் இதனால் மிகுந்த அப்சட்டில் உள்ளாராம்.
தினேஷ் கார்த்திக் மீதான இந்த அதிருப்தியால் அணித் தலைவரை மாற்றும் முக்கிய முடிவினை ஷாருக்கான் விரைவில் அறிவிப்பார் என தோன்றுகிறது. தினைஷ் கார்த்திக்கின் பேட்டிங்கும் சரியாக எடுபடாததால் இயான் மோர்கனை கேப்டனாக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.