#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அச்சச்சோ என்னால நம்ப முடியலையே.... சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான் திடீர் மரணம்.! சோகத்தில் ஷேவாக்.!
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே காலமானார் என்ற செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஜாம்பவானாக விளங்கியவர் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே. இவருக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று மாலை அவர் மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 52 வயது நிரம்பிய ஷேன் வார்னே தனது தனிப்பட்ட பணிகளுக்காக தாய்லாந்தில் உள்ள கோசாமூய் என்ற இடத்திற்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில் இன்று மாலை அவர் தங்கியிருந்த விடுதியில் அவர் எந்தவித பேச்சு மூச்சும் இன்று கிடந்துள்ளார். உடனடியாக மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்து பார்த்த போது, அவரின் உயிர் பிரிந்தது தெரியவந்துள்ளது. திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், உதவிக்கு யாரும் இல்லாததால் உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஜாம்பவானாக விளங்கிய ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே மறைவு குறித்து தகவல் அறிந்த கிரிக்கெட் பிரபலங்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஷேன் வார்னே மரணம் அடைந்த செய்தியை தன்னால் நம்ப முடியவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் கூறி உள்ளார்.