மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்திய அணி அபார வெற்றி.! மைதானத்திலேயே சண்டை.. கோவப்பட்ட இலங்கை கேப்டன்.! வைரல் வீடியோ.!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டியில் விளையாடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றநிலையில், நேற்று நடந்த இரண்டாவது போட்டியில், இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
நேற்று கொழும்புவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செத்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 276 ரன்களை நிர்ணயித்தது.
— cric fun (@cric12222) July 20, 2021
இதனையடுத்து 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான ப்ரித்விஷா மற்றும் தவான் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய வீரர்கள் ஓரளவிற்கு நிதானமாக ஆடினர். இறுதியில் இந்திய அணி 49. 1 வது ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆட்டம் நிறைவடைந்தவுடன் இலங்கை கேப்டன் தசுன் ஷனாகாவும், பயிற்சியாளர் மிக்கி அர்தரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.