ஆஷஸ்: தடுமாறிய ஆஸ்திரேலியா! தனி ஆளாய் போராடி அணியை மீட்ட ஸ்டீவ் ஸ்மித்!



Steve smith backs on first test

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் நேற்று துவங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ஆஸ்திரேலியா அணி. இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 44 ஓவர்களிலேயே 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது 122 ரன்கள் மட்டுமே எடுத்தனர். 

Ashes series

ஒன்பதாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சிடில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அடித்தனர். பின்னர் சிடில் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கடைசி விக்கெட்டிற்கு லயனுடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் அபாராமாக ஆடி சதமடித்தார். தனி ஆளாய் நின்று போராடிய ஸ்மித் 144 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

Ashes series

ஆஸ்திரேலியா அணி 80.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 284 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் ப்ராட் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது.