கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை திக்குமுக்காடச் செய்த நம்ம சின்னப்பம்பட்டி நடராஜன்.! புகழ்ந்து தள்ளிய தமிழக முதல்வர்.!



tamilnadu cm talk about cricket player natarajan

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஐ.பி.எல் 2020 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். சன்ரைசர்ஸ் அணி இறுதி ஓவர்களில் நடராஜனையே நம்பி உள்ளது. இறுதி ஓவர்களில் நடராஜன் வீசும் பந்தை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் பலர் திணறி வருகின்றனர்.

சேலம் மண்ணின் மைந்தர் நடராஜன் நடராஜன் வீசும் யார்க்கர் பந்துகளை சமாளிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் தடுமாறினர் இந்த வருட ஐ.பி.எல் சீசனில். தகுதிச்சுற்றில் ஆடும்போது பெங்களூரு அணியின் எண்ணிக்கையை உயர்திக்கொண்டிருந்த ஏபி டி வில்லியர்ஸை திணறவைத்தார். அவர் வீசிய யார்க்கர் பந்தில் நாடு ஸ்டெம்பை பறக்கவிட்டு அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்தார் யார்க்கர் மன்னன் நடராஜன்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர் நடராஜனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர் திரு.நடராஜன் அவர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. அவரது சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்!" என பதிவிட்டுள்ளார் தமிழக முதலமைச்சர்.