#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நான் இந்திய அணியின் கேப்டன் ஆனதற்கு இவர் தான் முக்கிய காரணம்! ஓப்பனாக பேசிய விராட் கோலி!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஐந்து கட்டங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகள், கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து போட்டிகளும் தடை செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருவதும், அவர்கள் வீடியோக்களை பகிர்ந்து வருவதும் ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.
இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இன்ஸ்டாகிராம் மூலம் அஸ்வினுடன் கலந்துரையாடினார். அப்போது கேப்டன்ஷிப் எப்படி கிடைத்தது என்ற கேள்விக்கு விராட் கோலி பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து விராட் கூறுகையில், தான் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் பங்கு அதிகம் இருக்கிறது என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். மேலும், 6-7 ஆண்டுகள் எனது நடவடிக்கைகள், வளர்ச்சியை கவனித்து தான் கேப்டன் பொறுப்புக்கு என்னை தோனி பரிந்துரைத்திருக்கிறார் என விராட் கூறியுள்ளார்.