மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓங்கி அடித்த வார்னர்! துடி துடித்து கீழே விழுந்த பந்து வீச்சாளர்! பயிற்சியின் போது நடந்த விபரீதம்!
உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை நடந்துள்ள போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணி புள்ளி பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா விளையாடும் போட்டியானது நாளை நடைபெறவுள்ளது.
இரண்டு அணிகளும் வலுவான நிலையில் இருப்பதால் நாளைய போட்டியானது இரண்டு அணிகளுக்கும் வலுவான ஒன்றாகத்தான் இருக்கும். இந்நிலையில் நாளைய போட்டிக்காக ஆத்ரேலியா அணி வீரர்கள் ரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் நீண்ட நேரம் வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் டேவிட் வார்னருக்கு ஓவல் மைதானத்தில் உள்ள ஒரு வலைப்பயிற்சி பந்து வீச்சாளர் பந்து வீசி கொண்டிருந்தார். அப்போது வார்னர் அடித்த பந்து எந்திரபாரத விதமாக பந்து வீசியவரின் தலையை தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வார்னர் உடனே பந்து வீச்சாளரின் அருகில் சென்று அவரை ஆறுதல் படுத்தினார்.
அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணியின் மருத்துவர் விரைந்துவந்து பந்து வீச்சாளருக்கு முதலுதவி செய்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.