வாயைப்பிளக்கப்போகும் இந்தியத் திரையுலகம்; கங்குவா படம் குறித்து மனம்திறந்த சூர்யா.!
இந்த உலக கோப்பை தொடரில் எதிரணிகளை மிரளவைத்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் சாதனை துளிகள்.!
கடந்த மே மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்கிய உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவர் முடிந்தும் அதிகமான பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் உலக கோப்பையை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அந்த அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.
இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் அடித்தது.
2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டி டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது. பின்னர் சூப்பர் ஓவரும் டையில் முடிந்ததால் அதிக பவுண்டரிகள் அடித்ததன் மூலம் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இப்போட்டியில் 1 விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், இந்த உலகக்கோப்பை தொடரில் தனது 20வது விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்காக ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து பவுலரானார்.
தவிர, இப்போட்டியில் 3 விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ், இந்த உலகக்கோப்பையில் தனது 16வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் ஒரே உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் இயான் போத்தமின் சாதனையை (16 விக்கெட், 1992) சமன் செய்து அசத்தினார்.
ஒரே உலகக்கோப்பையில் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து பவுலர்கள்:
20 ஜோப்ரா ஆர்ச்சர் (2019)
18 மார்க் வுட் (2019)
16 கிறிஸ் வோக்ஸ் (2019)
16 இயான் போத்தம் (1992)
14 ஆண்டிரு பிளிண்டாப் (2007)
2019 உலகக்கோப்பை தொடரில் அதிவேகத்தில் பவுலிங் செய்த பவுலர்கள்:
மார்க் வுட் (இங்கிலாந்து) - 154 கி.மீ.,
ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து) - 154 கி.மீ.,
மிட்சல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா ) - 154 கி.மீ.,
லூகி பெர்குசன் (நியூசிலாந்து) - 152 கி.மீ.,
செஷான் கேபிரியல் (வெஸ்ட் இண்டீஸ்) - 150 கி.மீ.