வென்று வா வீரர்களே.. ஒலிம்பிக் வீரர்களை உற்சாகப்படுத்தி இசையமைப்பாளர் யுவன் இசையமைத்த பாடல்! வைரலாகும் வீடியோ!!



yuvan make video to modivate tamilnadu olympic players

டோக்கியோவில் நடைபெற்று  வரும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இசையமைப்பாளர் யுவன்  சங்கர்  ராஜா உருவாக்கிய பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

2020 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் டோக்கியோ நகரில் இந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 

இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 12 வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர்  ராஜா 'வென்று வா வீரர்களே' என்ற பாடலை உருவாக்கியுள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு கூடை பந்தாட்ட கழகம் இணைந்து தயாரித்துள்ள இந்த பாடலை முதல்வர் மு.கஸ்டாலின் தலைமை செயலகத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த பாடல் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.