ஐயப்பனுக்கு மாலை போட்டுள்ளீர்களா.?! இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.!



follow these rules For Ayyappa saamy devotees

ஐயப்பன் சுவாமிக்கு மாலைப் போட்டு இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

கார்த்திகையில் வரும் எந்த சுப நாளிலும் காலையில் குளித்து விட்டு அருகில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு சென்று குருசாமி கையால் மாலை போட்டுக் கொள்ளலாம். மாலை போட்டுக் கொள்பவர்கள் ஒரு மண்டலம் அல்லது குறைந்த பட்சம் 41 நாட்கள் விரதம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மாலை 108 துளசி மணி கொண்டதாக இருப்பது சிறப்பு.

படுக்கை

தினமும் காலையில் குளித்து விட்டு அருகில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு சென்று பூஜை செய்ய வேண்டும். பாய் மற்றும் பெட்டில் படுத்து உறங்க கூடாது. காவி துணியை விரித்து அதில் உறங்குவது சிறப்பு. காலில் செருப்பு போடக் கூடாது. மேலும், மாலை அணித்திருப்பவர்கள் கன்னி சாமி என்றால் கருப்பு துணியும், மற்றவர்கள் காவி துணியும் அணிவது உத்தமம்.

Ayyappan

பிரம்மச்சரிய விரதம்

மாமிசம் உண்ணாமல் இருக்க வேண்டும். மேலும், குடி பழக்கம், புகை பிடித்தல் ஆகியவை செய்யக் கூடாது. இரத்த உறவில் யாராவது இறந்தால் மாலையை கழட்டி விட வேண்டும். 

முக்கியமாக பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும். வேலைக்கு சென்று வந்தால் முதலில் குளிக்க வேண்டும். மாதவிடாய் தீட்டு மற்றும் குழந்தை பெற்ற தீட்டு இருக்கும் வீடுகளுக்கு செல்லக் கூடாது.

இவ்வாறு விரதம் இருந்து மலைக்கு சென்று தேங்காய் உடைத்து ஐயப்பன் சன்னதியை வலம் வந்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.