உலகம் முழுவதும் கலைக்கட்டுகிறது விநாயகர் சதுர்த்தி விழா!. விழாவிற்கு அரசு விதித்த விதிமுறைகள்!.



vinayagar-sathurthi-festival-started


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் உலக புகழ்பெற்ற கற்பக விநாயகா் ஆலயம் உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று காலையில் ஆலயத்துக்கு முன்பு உள்ள கொடிமரத்துக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டது.

ஆலயம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு கொடியேற்ற விழா நேற்று காலை சிறப்பாக தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான விநாயகா் சதுர்த்தி வரும் செப்டம்பர்  13-ம் தேதி நடைபெறவுள்ளது. 

vinayakar
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு காவல்துறை சார்பில் விதிமுறைகள் விடுக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலை வைப்பதற்கு தடையில்லாசான்று பெற்றிருக்கவேண்டும். ஒலிபெருக்கி சம்பந்தமாக போலீசாரிடம் அனுமதி வாங்கவேண்டும். 

vinayakar

களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே வைக்க வேண்டும். சிலைகள் மீது எந்தவித ரசாயனம் பூசக்கூடாது. சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது போன்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

vinayakar

 கல்வி கூடங்கள், மருத்துவமனைகள், மதவழிப்பாட்டு தளங்கள் போன்ற இடங்களின் அருகில் சிலைகள் வைக்கக்கூடாது. சிலை ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது சிலை ஊர்வலத்துக்கு மினிலாரி, டிராக்டர் போன்ற வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் போன்ற விதிமுறைகளை விதித்துள்ளனர்.

விநாயகர் ஊர்வலம் நடக்கும் அணைத்து இடங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.