மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண்கலங்கிய முதலமைச்சர்.! மனம்திறந்து மன்னிப்பு கேட்ட ஆ.ராசா.!
நேற்று முன்தினம் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தில், முதல்வர் பழனிசாமியை அவதூறாக பேசியதாக வெளியான வீடியோ சர்ச்சைய ஏற்படுத்திய நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், திமுக எம்.பியும் துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா பேசியது தொடர்பாக அ.தி.மு.க சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தின்போது பேசுகையில், தன்னுடைய தாய் குறித்து ஆ.ராசா பேசியது குறித்து கண்கலங்கினார். அதில், என் தாயைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமாக பேசியிருக்கிறார். முதலமைச்சருக்கே இந்த நிலைமை என்றால், மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்கள் என தெரிவித்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, ஸ்டாலின் அரசியல் ஆளுமை மற்றும் எடப்பாடி அரசியல் ஆளுமை பற்றி தான் பேசி அதற்கு விளக்கம் கொடுத்தேன். எனது பேச்சு இரு தலைவர்களை பற்றிய தனிமனித விமர்சனம் அல்ல. எனது பேச்சுக்கு மனம் வருந்துகிறேன். முதல்வர் காயப்ட்டால் மன்னிப்பு கோருகிறேன். என்னால் முதல்வர் கண் கலங்கினார் என்பது எனது வாழ்வில் கரும்புள்ளியாக இருந்து விடக்கூடாது என தெரிவித்தார்.