மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாயமான 11 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம்: சடலத்தை மீட்ட போலீசார் தீவிர விசாரணை..! அதிரவைக்கும் பரபரப்பு சம்பவம்.!!
ஆரணியில் 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 11 ஆம் வகுப்பு மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. கூலித் தொழிலாளியான இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களது மகள் ஹரிப்பிரியா. இவர் ஆரணியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹரிப்பிரியாவை அவரது பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது . இதன் காரணமாக மனமுடைந்த ஹரிப்பிரியா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதன் பிறகு அவர் வீடு திரும்பாததால் அவருடைய் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர்.
எங்கு தேடியும் ஹரிப்பிரியாவை கண்டுபிடிக்க முடியாததால், நேற்று தனது மகளை காணவில்லை என்று ஆரணி காவல் நிலையத்தில் ஹரிப்பிரியாவின் தந்தை புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த ஆரணி காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் இன்று அதிகாலையில் வயல்வெளியில் உள்ள விவசாய கிணற்றில் ஹரிப்பிரியா சடலமாக மிதப்பதாக ஹரிப்பிரியாவின் பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள் கிராமத்தாரின் உதவியுடன் சடலத்தை கிணற்றில் இருந்து தூக்கியுள்ளனர்.
பின்னர் இது குறித்து ஆரணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஹரிப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சிறுமியின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கோபத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.