மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆரம்பிக்களாங்களா?.. 10,11,12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு.. மாணவர்களே தயாராகுவீர்..!!
தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த பொதுதேர்வு மாணவர்களின் எதிர்கால படிப்பை நிர்ணயம் செய்யும் என்பதால், ஆசிரியர்களும் தங்களது மாணவர்களை முழுவீச்சில் தேர்வுக்காக தயார்படுத்தி வருகின்றனர்.
வாழ்க்கையில் ஜெயித்துக்காட்ட வேண்டும் என்று நினைத்து போராடிவரும் பல இளைஞர்களும், மாணவ, மாணவிகளும் இந்த போட்டி தேர்வுக்காக தயாராகி வருகின்றனர். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13-ல் தொடங்கி, ஏப்ரல் 3-வரை நடைபெறும். 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மாணவர்கள் நன்கு படித்து தேர்வெழுதி, அசத்தலான மதிப்பெண்கள் பெற எமது குழுமத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.