#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உல்லாசமாக இருக்க அழைத்த 14 வயது சிறுவன்! 3 குழந்தைகளுக்கு தாயான பெண் செய்த காரியத்தால் நேர்ந்த விபரீதம்!
பீகார் மாநிலம் ஷம்புதம்திவில் அராசி கர்ஷாப் பகுதியை சேர்ந்தவர் மிதுன் தாதியா. இவரது மனைவி ஷீலா தேவி. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் பிழைப்பு தேடி தமிழகம் வந்த இவர்கள் குடும்பத்துடன் திருப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அங்கு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மிதுன் தாதியாவிற்கும், ஷீலா தேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மிதுன் தாதியா மட்டும் தனது 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, பீகாருக்கு சென்றுவிட்டார். ஆனால் ஷீலா தேவி திருப்பூரிலேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை ஷீலாவின் வீட்டு கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை . இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு ஷீலா பிணமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் ஷீலாவின் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் ஷீலா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் ஷீலாவுக்கு, அவருடன் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்த 14 வயது இளைஞர் ஒருவருடன் தகாத உறவு இருந்தது எனவும், இது கணவருக்கு தெரியவந்த நிலையில் அவர் சண்டை போட்டுக்கொண்டு பீகாருக்கே சென்றுவிட்டார் எனவும் தெரிய வந்துள்ளது.
மேலும் அதனை தொடர்ந்து போலீசார் சிறுவனை பிடித்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் வீட்டிற்கு சென்று ஷீலாவை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார்.ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த சிறுவன் சிறுவனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து போலீசார் சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.