மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
10 கிலோ கஞ்சா., 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது.!!
தமிழகத்தில், கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியமின்றி போதைக்கு அடிமையாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. பள்ளி படிக்கும் வயதில் போதை பொருளுக்கு அடிமையாகி எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடுகிறது இந்த போதை பழக்கம்.
கஞ்சா, மது போன்ற போதைக்கு அடிமையாக ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களும் இதற்க்கு அடிமையாகி வருகிறார்கள். இப்படியான சமூகத்தில் இருக்கும் நாம், நமது அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை நினைத்து பயம் கொள்ளவே வேண்டும்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒசூர் அருகே கஞ்சா வைத்திருந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்களிடத்து சுமார் 10 கிலோ அளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டது குறித்து, போத்தி நாயனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுமா வயது 29, மைசூரைச் சேர்ந்த சாரதாம்மா வயது 39, சாம்ராஜ் நகர் வெங்கடேஷ் வயது 52 கைது செய்யப்பட்டுள்ளனர்.