மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெற்றோர்களே கவனம்.. கொசு விரட்டும் மருந்தை குடித்த 2 வயது குழந்தை பலி.!
கொசு விரட்டும் மருந்தை குடித்த 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மணலி மாத்தூர் பகுதியில் வசித்து வந்த தம்பதியினர் பாலாஜி - நந்தினி. இந்த தம்பதியினருக்கு 2 வயது லட்சுமி என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இதில் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது கட்டில் அருகே இருந்த கொசு விரட்டும் மருந்தை கையில் எடுத்து விளையாடியுள்ளது. இதனை வீட்டில் யாரும் கவனிக்காத நேரத்தில் வாயில் வைத்து கொசு விரட்டும் மருந்தை உறிஞ்சி குடித்துள்ளது.
மருந்தை குடித்த அடுத்த சில நிமிடங்களிலேயே குழந்தையின் வாயில் நுரை தள்ளி மயங்கியுள்ளது. இதனையடுத்து உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொசு விரட்டும் மருந்து குடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.