மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகனிடம் சண்டையிட சென்ற நபர்... கடைசியில் தந்தைக்கு நிகழ்ந்த சோகம்... கதறும் குடும்பத்தினர்!!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மருகால்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா. கூலி தொழிலாளியான இவருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார். மாரியப்பன் அதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ராஜா என்பவரை அடிக்கடி கிண்டல் செய்து வந்துள்ளார்.
இதனால் மாரியப்பன் மற்றும் ராஜாவுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் ஆத்திரம் தாங்கமுடியாமல் இருந்த ராஜா நேற்று நேராக மாரியம்மன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வாசலில் மாரியப்பனின் தந்தை செல்லையா நின்றததை அடுத்து செல்லை மற்றும் ராஜாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜா செல்லையாவை அருகில் இருந்த உருட்டு கட்டை தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார். அதில் பலத்த காயமடைந்த செல்லையாவை மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை தேடி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.