ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
டெங்கு தீவிரம்: வேகமாய் பரவி வரும் டெங்கு காய்ச்சல்., 46 பேர் சிகிச்சை!!
தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் அந்தந்த நகராட்சி அதிகாரிகள் முன்னெடுத்து வருகிறார்கள்.
டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் எந்த அளவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே டெங்குவின் தீவிரம் அறிந்து மக்கள் முன்னெச்சரிக்கை மேற்கொள்வது அவசியமான ஒன்றாக உள்ளது.
முடிந்தவரையில் கொசுக்கள் உற்பத்தி ஆகக்கூடிய வாய்ப்பிருக்கு பகுதிகளை உடனே அப்புறப்படுத்துவது நல்லது. கொசுக்கள் உற்பத்தி ஆக காரணமான வீட்டை சுற்றிலும் இருக்க கூடிய நீர் தேக்கம் ஏற்படக்கூடிய பொருட்களை உபயோகப்படுத்தாமல் இருக்கலாம் அல்லது அவ்வப்போது சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
வீட்டில் தண்ணீர் தொட்டியை திறந்து வைக்கக்கூடாது, தண்ணீர் தேங்கும் வகையில் எந்த பொருட்களும் பொது இடங்களில் வீசக்கூடாது என வீடு வீடாக சென்று விழிப்புணர்வை சுகாதாரத்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர். குழந்தைகளை கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுக வேண்டும்.
தற்போது மதுரையில் இன்று மட்டுமே 1 குழந்தை உட்பட 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தி 46 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.