6 கால்களுடன் பிறந்த அதிசய கன்று குட்டி.. வைரல் புகைப்படம்!



6 leg cow baby born in puthukottai

சமீப காலமாக மரபணு கோளாறால் ஆடு மற்றும் மாடு போன்ற கால்நடைகள் மூன்று கண்கள், ஆறு கால்கள் போன்று வழக்கத்திற்கு மாறாக பிறக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் மரபணு கோளாறு தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் தென்னஞ்சரையான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகர்-ஜெயந்தி தம்பதியினர் பசு வளர்த்து வந்துள்ளனர். இவர்களுடைய பசுவானது தற்போது கன்றுக்குட்டி ஈன்றுள்ளது. அந்த கன்றுக்குட்டி வழக்கத்திற்கு மாறாக ஆறு கால்கள் இருந்துள்ளது.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இதனையடுத்து கால்நடைத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த கால்நடை உதவி மருத்துவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் பேசிய அவர், இயற்கைக்கு மாறாக பிறப்பது பாலிமெலியா என்று கூறப்படுகிறது. மரபணு கோளாறு அல்லது பிழை எனப்படும் குரோமோசோம் பிரிதலில் ஏற்படும் மாற்றத்தினாலும், வைட்டமின் மாற்றத்தினாலும் இதுபோன்று ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.