மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
75 வயது தாத்தா, பேத்தி வயதுள்ள சிறுமிகளுக்கு செய்யும் காரியமா இது?..! நெல்லையில் அதிரவைக்கும் சம்பவம்.!
வீட்டருகே விளையாடிய சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிழட்டு காமுகன் கைது செய்யப்பட்டுள்ளான்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் வசித்து வருபவர் ராசையா (வயது 75). இவர் கல்குவாரியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று ராசையா வீட்டில் இருந்த நிலையில், அவர் வீட்டருகே 10 வயதுடைய 2 சிறுமிகள் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது, சிறுமியை அழைத்த ராசையா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் பதறிப்போன சிறுமிகள் தங்களின் பெற்றோரிடம் நடந்ததை தெரிவிக்கவே, அதிர்ச்சியடைந்த பெற்றோர் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ராசையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.