திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விவசாயி வீட்டில் திருடு போன 9 சவரன் நகை மீட்பு.. இளைஞர் கைது.!
சின்னசேலம் வட்டம் பேக்காடு கிராமத்தில் சிவக்குமாா் - தமிழ்ச்செல்வி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.சிவகுமார் அதே பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிவகுமார் சம்பவத்தன்று தனது வீட்டின் முன் பக்க கதைவை பூட்டிவிட்டு பின்னால் இருக்கும் தனது தோட்டத்தில் உள்ள முத்துசோளத்துக்கு மருந்து அடித்து கொண்டிருந்தார். பின் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சிவகுமார் வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து சிவகுமார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 9 சவரன் நகையை யாரோ கொள்ளையடித்து சென்றுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து உடனடியாக சிவகுமார் கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் தொடர்ந்து அவரை விசாரித்ததில் சிவகுமார் வீட்டில் நகையை திருடியதை அந்த இளைஞர் ஒப்புக்கொண்டார்.
மேலும் அந்த இளைஞர் கள்ளக்குறிச்சியை அடுத்த தென்சிறுவள்ளூரைச் சேர்ந்த முத்துசாமி மகன் சந்திரமோகன் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் இருந்து நகை மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 9 சவரன் நகையை மீட்டு சிவகுமாரிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.