ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
ஆன்லைன் கேம்மால் மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது மாணவன்! பெற்றோர்களே உஷார்!!
உலகம் முழுவது செல்போனுக்கு அடிமையாகி கொண்டிருக்கும் அவல நிலையில் தான் நாம் உள்ளோம். கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவற்றில் பலியான உயிர்களின் எண்ணிக்கை தாண்டி, இன்று ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் மோசடி, ஆன்லைன் கேம் மோகத்தினால் பலி போன்ற வழக்குகள் தான் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், அரக்கோணம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவன் ஆன்லைனில் தொடர்ந்து கேம் விளையாடியுள்ளார். நாளடைவில் அதற்கு அடிமையாகி நாள் முழுவதும் ஆன்லைன் கேம் விளையாடுவதில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், 17 வயது மாணவனுக்கு மனநலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மோகத்தால் கை, கால்கள் நிலையாக இல்லாத காரணத்தினால், அவரை கட்டி போட்டு மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.