மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"வெளிய சொன்ன கொன்றுவேன்..." 16 வயது மகளை தந்தையே பலாத்காரம் செய்த கொடூரம்... பரபரப்பு தீர்ப்பு.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 வயது மகளை தொடர் பாலியல் பலாத்காரம் செய்து வந்த தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பை அளித்திருக்கிறது போக்சோ நீதிமன்றம்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கிளைம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (40), கட்டிடத் தொழிலாளியான இவரது மனைவி கடந்த 10 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில் தனது 16 வயது மகளுடன் வீட்டில் வசித்து வந்தார். அந்த மாணவி அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மகளிடம் அவரது தந்தை பாலியல் பலாத்காரத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
மேலும் இதைப்பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் விரட்டி இருக்கிறார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த சிறுமியை தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சிறுமியை மீட்டு காப்பாற்றி உள்ளனர். அப்போது சிறுமியை தனக்கு நடந்தவற்றை அவர்களிடம் கூறி இருக்கிறார் . மேலும் இது தொடர்பாக திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவும் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் அந்த சிறுமியின் தந்தை செந்தில்குமாரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனையும் தனது மகளை கொலை செய்து விடுவதாக மிரட்டியதற்காக ஏழு வருட கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்ட செலுத்தினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.