மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிளஸ் டூ படிக்கும் மாணவனுக்கு பாலியல் தொல்லை...! 24 வயது இளம் பெண் போக்சோவில் கைது..!
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் வசித்து வரும் ப்ளஸ்-2 படிக்கும் மாணவர் ஒருவர் பொதுத் தேர்வு முடிவடைந்ததால் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற அந்த மாணவர் வீடு திரும்பவில்லை.
இதைத் தொடர்ந்து அவரின் பெற்றோர், மாணவனை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி வந்தனர். ஆனால், மாணவர் எங்கும் இல்லாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனை காணவில்லை என வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன மாணவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண், அந்த மாணவரிடம் ஆசை வார்த்தை பேசி அவரை அழைத்துச் சென்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவர்கள் இருக்கும் இடம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் செல்போன் சிக்னல் உதவியுடன் மாணவர் இருந்த இடத்துக்கு சென்ற காவல்துறையினர், மாணவரை மீட்டு அவரை கடத்தி சென்ற பெண்ணை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மாணவரை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.