திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து மாணவன் செய்த செயல்!.
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே ஆவாரம் பட்டியில் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றிய பள்ளி ஆசிரியைக்கு மாணவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த ஆசிரியை கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய வீட்டின் குளியலறையில் குளித்து கொண்டிருந்த போது, யாரோ ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தனர். அதைப்பார்த்த ஆசிரியை பயந்து வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
அந்த ஆசிரியைக்கு, பக்கத்து வீட்டில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மீது சந்தேகம் வந்து, மாணவனின் பெற்றோரை அழைத்து ஆசிரியை எச்சரித்துள்ளார்.
இதனால் எரிச்சலடைந்த மாணவன் ஆசிரியையின் உடலில் எந்தெந்த இடத்தில் மச்சம் உள்ளது என்று குறிப்பிட்டு, இது தொடர்பாக யாரிடமாவது புகார் தெரிவித்தால் குளிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம் என்று எழுதி ஆசிரியை வீட்டிற்குள் வீசியுள்ளான்.
அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் அந்த மாணவனை பிடித்து நடத்திய விசாரணையில், தன்னுடன் படிக்கும் 2 மாணவர்களும் சேர்ந்து கடந்த 2 வருடங்களாக ஆசிரியை குளிப்பதை திருட்டு தனமாக பார்த்து ரசித்ததாகவும், மேலும் செல்போன் கேமரா மூலம்வீடியோ எடுத்ததாகவும் கூறியுள்ளான். இதனையடுத்து அந்த 3 மாணவர்களையும் கைது செய்தனர்.