மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுரையில் பரபரப்பு..பத்திரப்பதிவு அலுவலகம் முன் கூலி தொழிலாளி தீ குளித்த பரிதாபம்.!
மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம் அருகே எருக்கலை நத்தம் பகுதியில் கூலி வேலை செய்யும் மாதவன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக நிலம் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மாதவன் பணதேவைக்காக தனக்கு சொந்தமான 14 சென்ட் நிலத்தை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கனகவேல் என்பவரிடம் அடமானம் வைத்து பணம் வாங்கியுள்ளார். அதன் பின் மாதவனால் வாங்கிய பணத்திற்காக வட்டியை கூட சரியான நேரத்தில் கட்ட முடியாமல் கஷ்டபட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து மாதவன்
பொருளாதார ரீதியான பிரச்சனையில் இருந்து வெளிவர வேண்டும் என்று முடிவு செய்து அடமானம் வைத்திருந்த நிலத்தை கனகவேலிடமே சில மாதங்களுக்கு முன்பு விற்பனை செய்துள்ளார். அதன் பின்னர் கனகவேல் அந்த 14 சென்ட் இடத்தை ஒருவரிடம் விற்பனை செய்ய பேசி ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதனை அறிந்த மாதவன், கனகவேல் அதிக விலைக்கு தன்னுடைய இடத்தை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்ததால் இடத்தை திருப்பி தருமாறு கனகவேலிடம் கேட்டுள்ளார். ஆனால் கனகவேல் இடத்தை மாதவனுக்கு தர மறுத்து வேறொரு நபருக்கு விற்க ஊமச்சிகுளம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து அங்கு சென்ற மாதவன் அந்த பத்திர பதிவை தடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் அவரால் முடியாத நிலையில் திடீரென பத்திரப்பதிவு அலுவலகம் முன் தின்னரை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் பலத்த தீ காயமடைந்த மாதவனை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ராஜாஜி
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஊமச்சிகுளம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பத்தர பதிவு அலுவலகம் முன் ஒருவர் தீ குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.