மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆனந்தமாய் குளிக்க குளத்தை தேடிச் சென்ற இளைஞர்: சடலமாக திரும்பி வந்ததால் சோகத்தில் மூழ்கிய கிராமம்..!
கல்குவாரி குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகேயுள்ள வடபாதி கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மகன் சின்னத்தம்பி (29). கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் அருகேயுள்ள தண்ணீர் பந்தல் கிராமத்திலுள்ள உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று மாலை அந்த பகுதியில் அமைந்துள்ள கல்குவாரியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அங்கு குளத்தில் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடி, கல்குவாரிக்கு சென்றனர். அங்குள்ள குளத்தின் கரையில் சின்னதம்பியின் உடைகள் மற்றும் காலணி கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையம் மற்றும் மருவத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நேற்று காலை காவல்துறையினரின் முன்னிலையில் குளத்தில் இருந்து சின்னதம்பியின் உடலை மீட்டனர். பின்னர், காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலுர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து மருவத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.