மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை... தமிழக இளைஞர் கைது.!
அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இருந்து 156 பயணிகளுடன் இண்டிகோ விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன் தினம் வந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் திடீரென கூச்சலிட்டார். இது தொடர்பாக விமான பணிப்பெண்கள் அந்த பெண்ணிடம் கேட்டிருக்கின்றனர். அப்போது தனக்கு பின் இருக்கையில் அமர்ந்திருக்கும் இளைஞர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்தார். இது தொடர்பாக அந்த இளைஞரிடம் கேட்டபோது தனது கை தெரியாமல் பட்டுவிட்டதாக கூறினார். ஆனால் அந்தப் பெண் இதுபோன்று பலமுறை அந்த இளைஞர் செய்ததாக தெரிவித்தார்.
இது தொடர்பாக விமானத்தின் கேப்டனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் சென்னை விமான நிலையத்தை தொடர்பு கொண்டு பாதுகாப்பு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு தெரிவித்தார். விமானம் சென்னையில் தர இறங்கியதும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளைஞரை கைது செய்து சுங்கத்துறை சோதனைகளை முடித்து விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் .
விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சக்தி(28) என்பதும் சவுதி அரேபியாவில் கூலி வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. மேலும் தன்னை விட்டு விடும்படி விமான நிலைய அதிகாரிகளிடம் கெஞ்சி இருக்கிறார். ஆனால் அந்தப் பெண் இவரை விட்டால் பல பெண்களுக்கும் இதுபோன்று தொடர் தொல்லைகளை கொடுப்பார் எனக்கூறி அவர் மீது புகாரை எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.