மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த இளம்பெண்ணுக்கு சரமாரியாக கத்திக்குத்து; கோவையில் பயங்கரம்.. கல்லூரி மாணவர் வெறிச்செயல்.!
ஒருதலையாக வேலைக்கு சென்று வரும் இளம்பெண்ணை காதலிப்பதாக மிரட்டிய கொடூர இளைஞர், காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அவரின் மீது கொலை முயற்சி நடந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம். அங்குள்ள பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த 19 வயது பெண்மணி, சுந்தர்ராஜபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
ஸ்ரீராம் 19 வயது இளம்பெண்ணை நான் உன்னை காதலிக்கிறேன் என கூறி ஒருதலையாக காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த காதலில் விருப்பம் இல்லாத இளம்பெண், ஸ்ரீராமின் காதலை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு டிராவல்ஸ் நிறுவனத்திற்கு கத்தியுடன் சென்ற ஸ்ரீராம், பெண்ணை காதலிக்க வற்புறுத்தி மிரட்டடியுள்ளார். காதலை ஏற்றுக்கொள்ள பெண் மீண்டும் மறுப்பு தெரிவித்ததால், அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்.
படுகாயமடைந்து உயிருக்கு போராடிய பெண்ணை மீட்ட அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், கல்லூரி மாணவரான ஸ்ரீராமை பிடிக்க 2 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.